டெல்லி : ஏர் பியூரிஃபையர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ஏன் குறைக்கக்கூடாது? என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசு 10 நாட்களில் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏர் பியூரிஃபையர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 5%ஆக குறைக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
