சென்னை: செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகரில் திமுக சார்பில் நடைபெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார். சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வே.கருணாகரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்ட விழாவில் சிறப்பு அழைப்பாளராக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பங்கேற்றார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசுகையில், ‘‘மக்களுக்கு சேவை செய்யவா வருகிறார் விஜய். எந்த சித்தந்ததோடு விஜய் வருகிறார் என்பது முக்கியம். 200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு வரவில்லை. 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு நடிகர் விஜய் வருகிறார்’’ என்றார். விழாவில் திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு வரவில்லை 2 லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் விஜய் வருகிறார்: நடிகர் கருணாஸ் காட்டம்
- விஜய்
- கருணாஸ் கதம்
- சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- மோன்டியம்மன்
- செயலாளர் நாயகம்
- சென்னை வடகிழக்கு மாவட்டம்
- எஸ். சுதர்சனம்
