×

மீன்சுருட்டி பகுதியில் விதைப்பண்ணை வயல் பயிர் விளைச்சல்

ஜெயங்கொண்டம், டிச. 25: மீன் சுருட்டி பகுதியில் விதைப்பண்ணை வயல் பகுதிகளில் பயிர் விளைச்சல் பற்றி வேளாண்மை இனை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி வயல்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி அலுவலர் பாலாஜி காட்டாகரம்(வடக்கு) சுத்துகுளம் குக்கிராமத்தில் மணிமாறன் மற்றும் குண்டவெளி (கிழக்கு) ராமதேவநல்லூர் குக்கிராமத்தில் தென்னரசு ஆகிய இரண்டு விவசாயிகளின் நெல் பயிர் சிஆர் 1009-சப்1 இரக விதைப்பண்ணை வயல் பயிர் விளைச்சல், பற்றி பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் மின்னனு பயிர் கணக்கெடுப்பு மற்றும் விவசாயிகள் பதிவு நடைபெற்றதை பார்வையிட்டு விரைவாக முடித்திட ஆலோசனைகள் வழங்கி அறிவுறுத்தினார். மேலும் மீன்சுருட்டி கிராமத்தில் தமிழக முதல்வர் சிறப்பு புதிய திட்டமான உழவர் நல சேவை மையத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) மகேந்திரவர்மன், உதவி வேளாண்மை அலுவலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags : Meensurutti ,Jayankondam ,Ulagamai Murugakani ,Ariyalur district… ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்