திருப்பூர், டிச. 25: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சிந்தாமணி தியேட்டர் பகுதியில் பாம்புகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, சிந்தாமணி தியேட்டர் பகுதியில் கருப்பு நிற பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அவிநாசி மங்கலம் ரோடு ராயன் கோயில் காலனியை சேர்ந்த விஜயகாந்த் (40) என்பதும், அவர் அப்பகுதியில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த சாரை, நாகப்பாம்பு, தண்ணீர் பாம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
