விருதுநகர், டிச. 25: விருதுநகர் மாவட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், மின் கம்பி உதவியாளர் தகுதி காண் தேர்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக கலெக்டர் சுகபுத்திரா நேற்று தெரிவித்துள்ளார். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட செய்தி குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் மின் கம்பியாள் உதவியாளர் தகுதி காண் தேர்வு டிச. 13, 14ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
அந்த தேர்வு நிர்வாக காரணங்களால் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தத் தேர்வானது டிச. 27, 28 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
