×

கடமலைக்குண்டு அருகே பூக்குழி இறங்கிய முருக பக்தர்கள்

வருசநாடு, டிச.25: கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பழநி முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விரதம் இருந்த பக்தர்கள் இன்று பாதயாத்திரையாக பழனிக்கு செல்ல உள்ளனர். முன்னதாக அந்த கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பாக முருக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியை காண கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர். முருக பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பூக்குழி இறங்கிய பின்னர் முத்தாலம்மன்சாமியை வழிபட்ட முருக பக்தர்கள், அங்கிருந்து பழநிக்கு பாதயாத்திரை பயணங்கள் தொடங்கினர்.

 

 

Tags : Murugan ,Kadamalaikundu ,Varusanadu ,Melapatti ,Lord Murugan ,Palani ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்