×

கண்பார்வை குறைவால் மனம் உடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

தேனி, டிச. 25: தேனி அருகே அன்னஞ்சியில் கண்பார்வை குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தேனி அருகே அன்னஞ்சி கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி வனிதா(35). இவரது தாய் வரதம்மாள்(50). இவர் தனது மகள் வனிதா உடன் வசித்து வந்தார். வரதம்மாளுக்கு கண் பார்வையில் குறைவு ஏற்பட்டது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் கண் பார்வை சம்பந்தமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த வரதம்மாள் இரவு அவரது அறையில் படுத்து தூங்கினார். பக்கத்து அறையில் வனிதா தூங்கினார். காலையில் வனிதா எழுந்து அவரது அம்மா வரதம்மாள் படுத்திருந்த அறைக்கு சென்றார்.

அப்போது, அந்த அறையில் வரதம்மாள் தூக்கு போட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனிதா அளித்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வரதம்மாளின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Theni ,Annanji ,Vanitha ,Narayanasamy ,Kaliamman Kovil Street ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்