×

10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்

சென்னை, டிச. 25: திருவளளூர் மாவட்டட வனச்சரக அலுவலர் அருள்நாதன் மற்றும் வனவர்கள் வேப்பம்பட்டு பகுதியில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி நிறுத்தினர். ஆட்டோவில் சோதனை மேற்கொண்ட போது 10 கிலோ எடை கொண்ட ஆண் எறும்புத்தின்னியை கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, வனச்சரக அலுவலர்கள் எறும்புத்தின்னியை மீட்டனர். பிறகு ஆட்டோவில் வந்த நாமக்கல் பாலமணி (67), திருவள்ளூர் சுரேஷ் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் வனச்சரக அலுவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : Chennai ,Thiruvallur ,Arulnathan ,Veppampattu ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,...