சிவகாசி, டிச. 25: மதுரை கரிமேடு மேலபொன்னநகரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சுப்புராஜ் (35). இவர் சிவகாசி – சாத்தூர் ரோட்டில் பாறைபட்டியில் தனியாருக்கு சொந்தமான ஒர்க்ஷப்பில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி ஒர்க்ஷாப்பில் விட்டு வெளியே சென்றவர் நேற்று முன்தினம் காலை ஒர்க்ஷாப்பிற்கு வேலைக்கு வந்த மினி பஸ் சீட்டில் பிரேதமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சுப்புராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுப்புராஜ் சகோதரர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
