×

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

திருப்பூர், டிச. 25: திருப்பூர் காங்கயம் அடுத்த பட்டையகாரன் புதூரை சேர்ந்தவர் வினோத் (28). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பல்லடத்தில் இருந்து காங்கயத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொசவம்பாளையம் பகுதியில் வந்த போது பைக் நிலைதடுமாறியதில் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Tiruppur ,Vinoth ,Puthur ,Kangayam ,Banyan ,Palladam ,Kosavampalayam ,
× RELATED திடக்கழிவு மேலாண்மை ஆலோசனை கூட்டம்