கூடலூர், டிச.25: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 100 நாள் வேலை திட்ட திருத்தங்கள் மற்றும் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றை திரும்ப பெறக்கோரி கூடலூர் ஒன்றிய திமுக சார்பில் மசினகுடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் தலைமை வகித்தார்.
கூடலூர் ஒன்றிய கழக பொறுப்பாளர் உத்தமன் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் பண்டியராஜ், திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன, தலைமை பொதுகுழு உறுப்பினர் அமிர்தலிங்கம், ஒன்றிய அவைத்தலைவர் கருப்பையா, ஒன்றிய பொருளாளர் மூர்த்தி, சிபிஐ முகம்மது கனி, மகேந்திரன், ராஜீ, சிபிஎம் தங்கராஜ், முருகன், செளக்கத், அலி வாசு, பாலகிருஷ்ணன், முஸ்லிம் லீக் ஹனீபா, செய்யது முகமது, கிளை செயலாளர்கள் சதீஸ்குமார் மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
