×

அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர், டிச.25: அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நாளை (26ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur ,District Collector ,Rathinasamy ,Ariyalur district ,Collector ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்