×

அரியலூரில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு

அரியலூர், டிச.25:அரியலூரில் பெரியார் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு எம்எல்ஏ சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அரியலூர் ரெட்டிஏரிக்கரையிலுள்ள பெரியார் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில், ஒன்றிய செயலர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் நீலமேகம் தலைமையில் நிர்வாகிகளும், திமுக நகரச் செயலர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகளும், சுகாதார தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் தண்டபாணி தலைமையிலான ஏஐடியூசி நிர்வாகிகளும், தவெக சார்பில் மாவட்ட துணை செயலர் விஜய் சேகர் தலைமையிலான நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Tags : Periyar Memorial Day ,Ariyalur ,MLA Chinnappa ,Periyar ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்