×

மயிலாடுதுறையில் மேம்பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்

மயிலாடுதுறை, டிச.25: மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் உள்ள காவேரி நகர், சாரங்கபாணி நினைவு மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் காவேரி நகரில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் 3.10.2025 முதல் தொடங்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பாலத்தில் கான்கீரிட் சீரமைப்பில் புதிய கான்கிரீட் நிரப்பும் பணிகள், தூண்களில் வலிமை சேர்க்கும் வகையில் கனமான இரும்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஓடுதளத்தில் உள்ள அனைத்து இணைப்புகளிலும் முழுமையாக வெல்டிங் பணிகள் முடிக்கப்பட்டு கைப்பிடிச்சுவர்கள் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளின் தொழில்நுட்பங்கள் மற்றும் இதுவரை முடிக்கப்பட்ட பணிகள், மீதம் உள்ள பணிகள் முடிப்பதற்கான காலஅளவு ஆகியவைகளை மாவட்ட கலெக்டர் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.

 

Tags : Mayiladuthurai ,District Collector ,Srikanth ,Sarangapani ,Memorial Flyover ,Kaveri Nagar ,Mayiladuthurai-Kumbakonam road ,
× RELATED 10 கிலோ எறும்புத்தின்னி கடத்தல்