ஆர்டிஓ விசாரணை வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் 23ம் தேதி ஆர்ப்பாட்டம்

அரியலூர்,ஜன.21: விவசாயிகளுக்கு விரோதமான வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற்றிட மத்திய பாஜக அரசை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் வீரம் செறிந்த போராட்டத்தை ஆதரித்தும் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி ஜன-23 அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசியக் கொடியை ஏந்தி டூவீலர் பேரணி நடத்துவது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அரியலூரில் ஏஐடியூசி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்ககூட்டம் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் தனசிங், அரியலூர் நகராட்சி சிவஞானம், தொமுச மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சட்டநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி , ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் விவசாயிகள் சங்கம் திருமானூர் ஆறுமுகம் உட்பட கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வரும் 23ம் தேதி மாலை 4 மணி அளவில் அரியலூர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்வது, ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அரியலூர் தேரடியில் இருந்து காலை ஒன்பது மணி அளவில் தேசியக்கொடியுடன் டூவீலர் பேரணியாக வந்து அண்ணாசிலை அருகே தேசியக்கொடி ஏற்றி விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக் கொள்வது. என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: