அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பயிற்சி மையம் உள்ளது. இங்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியை சேர்ந்த சங்கர்லால்ஜாட் (30) மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்று போலீஸ்காரராக தேர்வானார். பயிற்சி முடிந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அங்கேயே தனியாக தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் தங்கியிருந்த அறையில் சங்கர்லால்ஜாட் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து குடும்ப பிரச்னையா, அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிஎஸ்ஐஎப் பயிற்சி மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை
- சிஐஎஸ்எப்
- அரக்கோணம்
- மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை
- தக்கோலம்
- ரனிபெட் மாவட்டம்
- ஷங்கர் லால்ஜத்
- ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
