புதுவையில் புதிதாக 31 பேருக்கு தொற்று

புதுச்சேரி, ஜன. 21: புதுச்சேரியில் நேற்று புதிதாக 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அருண் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3,679 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 24, காரைக்கால் - 2, மாகே - 5 என மொத்தம் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், நேற்றைய தினம் உயிரிழப்பு எதுவுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 643 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38,737 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 127 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என்றார்.

Related Stories:

>