ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

ராமநாதபுரம், டிச.19: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சிவணுபூவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில கவுரவத்தலைவர் பரமேஸ்வரன் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதில் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் கைவிட வேண்டும், ஊராட்சி செயலர் பணி காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பாரபட்சமின்றி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: