பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர் கைது

ராமேஸ்வரம்,டிச.19: ராமேஸ்வரம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆரோக்கியம். இவரது மனைவி மரியமலர் கிளாடின்(46). இருவரும் ஜவுளி எடுக்க ராமநாதபுரம் சென்று விட்டு நேற்று மாலையில் வீடு திரும்பினர். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து எம்கே நகர் வழியாக வனப்பகுதி வழியாக இருவரும் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது மல்லிகை நகருக்கு அருகே மது அருந்தி கொண்டு இருந்த நான்கு பேர், ஜோசப் ஆரோக்கியத்திடம் தகாத வார்த்தைகளில் பேசி அவரின் மனைவியின் சேலையை பிடித்து இழுத்துள்ளனர். பின்னர் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளனர். அப்பகுதியினர் வருவதை பார்த்ததும், போதை ஆசாமிகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இதில் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்த நம்பு களஞ்சியம்(29) என்பவர் மட்டும் சிக்கினார். டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, நம்பு களஞ்சியத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: