திண்டுக்கல்லில் லேப்பில் பயங்கர தீ விபத்து

திண்டுக்கல், டிச. 19: திண்டுக்கல் அருகே பேகம்பூர் பகுதியில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் உள்ள ஒரு கடையில் நாகல் நகர் பகுதியை சேர்ந்த அங்கமுத்து என்பவர் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து பரிசோதனை நிலையத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு 9.30 மணியளவில் திடீரென ரத்த பரிசோதனை நிலையத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே பேகம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 20 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.தொடர்ந்து விசாரணை செய்ததில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் ரத்த பரிசோதனை நிலையத்தில் இருந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: