சங்கரன்கோவில், டிச. 17: சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையாவிடம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் ஒன்றியம் களப்பாகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் உள்ளது. எனவே இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மனுவுடன் களப்பாகுளம் பஞ்சாயத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள் விவரத்தையும் இணைத்துள்ளார்.
களப்பாகுளம் பஞ். பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட பணிகளுக்கு நிதி
- களப்பகுளம் பஞ்சாயத்து
- சங்கரன்கோவில்
- தென்காசி வடக்கு மாவட்டம்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை
- பொன்னையா
- சென்னை
- சங்கரன்கோவில் சட்டமன்றம்
