டூவீலர் மீது கார் மோதி தந்தை பலி

சேந்தமங்கலம், டிச. 17: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் சிவா (27), கூலித் தொழிலாளி. தனது 3 வயது மகள் நித்திஸ்வரியுடன் டூவீலரில் திருச்சி திருமணத்திற்கு காலை சென்று விட்டு, மாலையில் மீண்டும் ஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி கைகாட்டி அருகே, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நித்தீஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: