சேந்தமங்கலம், டிச. 17: சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி அடுத்த வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பரமணி (56), விவசாயி. இவர் சேந்தமங்கலம் அடுத்த படத்தையான்குட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை, குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். வயலுக்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக, கிணற்றின் அருகே சென்ற போது, கால் தவறி 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
