அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அந்த புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரியை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி படேல் மற்றும் அவரது கூட்டாளியான கான்ஸ்டபிள் விபூல் தேசாயை தொலைபேசியில் அழைத்து காந்திநகர் சர்காசன் பகுதியில் ஒரு கட்டுமானங்கள் நடைபெறும் இடத்திற்கு வந்து, பணத்தை வாங்கி செல்லும்படி கூறினார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பணத்தை வாங்குவதற்கு வந்தார். சிறிது துாரத்தில் படேல் நின்றிருந்தார். மேல் விபூல் தேசாய் மேல் அதிகாரி சார்பாக பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரைகையம் களவுமாக கைது செய்தனர். அதன் பின்னர் பி.கே.படேலும் கைது செய்யப்பட்டார். ரூ.30 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
