மதுரை : கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று தேவஸ்தானம் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பில், “கோயில் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார்; அது அவருக்கான உரிமை இல்லை. கோயிலுக்கு என்று சட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கோயில் நிர்வாகத்துக்கே முழு அதிகாரம் உள்ளது. தீபம் ஏற்றுவதில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
