பந்தலூர்,டிச.15: பந்தலூர் சிஎஸ்ஐ தூய திரித்துவ ஆலயத்தில் நேற்று சிறுவர்களுக்கான கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருச்சபையின் மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருச்சபையின் ஆயர் யோனா தாமஸ் தலைமை தாங்கினார். அம்மா சோனி முன்னிலை வகித்தார். இதில் இயேசு பிறப்பின் நிகழ்வை நாடகமாக நடித்தனர். தொடர்ந்து ஆலயத்தின் செயலாளர் தர்மசீலன், பொருளாளர் எபினேசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
