நத்தம் அருகே கார் கவிழ்ந்து சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்

நத்தம், டிச. 15:மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகேயுள்ள ஆயத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினர், நண்பர்கள் 8 பேருடன் நத்தம் அருகேயுள்ள சேர்வீடு பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நத்தம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லிங்கவாடி பிரிவு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஆயத்தம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (21), ராகுல் (20), பிரதீப் (21), வினீத் (2) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிகின்றனர்.

 

Related Stories: