யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

ஹராரே: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 311 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களை எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 311 ரன்களை எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியத் தரப்பில் ஆரோன் ஜார்ஜ் 104 பந்துகளில் 115 ரன்கள், வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 68 ரன்களை குவித்தனர். இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மத்ரே 62, விஹான் மல்ஹோத்ரா 38 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். யு-19 உலகக் கோப்பை தொடரில் 10வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 5 முறை உலகக் கோப்பையை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி 6வது முறையும் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. யு-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வரும் 6ம் தேதி இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Related Stories: