சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பிரசாரம்

பெரம்பலூர்,ஜன.19:பெரம் பலூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன் னிட்டு விழிப்புணர்வு பிரசாரத்தினை கலெக்டர் வெங்கட பிரியா துவக்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித் தும், பாதுகாப்பான முறை யில் பயணம் செய்வது குறித்தும், பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்ப டுத்துவதற்காக சாலை பா துகாப்பு மாத விழா ஜனவரி 18ம்தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதிவரை “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற அடிப்படையில் நடத் தப்படுகிறது.

பெரம்பலூர் புதுபஸ்டாண் டில்சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு

கலெக்டர்  வெங்கட பிரியா நேற்று சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன் னிட்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, பிரசாரத்தினை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள், ஒட்டுவில்லைகள், விழிப்பு ணர்வு வாசகங்கள்அடங்கி ய அறிவிப்பு பதாகைகளை வழங்கியும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறி த்த விழிப்புணர்வு ஏற்படு த்துவதற்காக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். பின்னர், பெரம்பலூர் புது பஸ்டாண்டில் நகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளையும், கழிப்பிட வசதிகளையும், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியின்போது பெரம்பலூர் வ ட்டார போக்குவரத்து வாக ன ஆய்வாளர் செல்வக்கு மார், நகராட்சி ஆணையர் குமரிமன்னன், தாசில்தார் அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: