திருப்புவனம், டிச. 12: திருப்புவனம் அருகே மணலூரை சேர்ந்தவர் சங்கையா (63). விவசாயி. இவர் கழுகேர் கடையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் 5 ஏக்கர் நிலத்தை 3 ஆண்டு குத்தகை பேசி 3 ஏக்கரில் வாழை பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார். 2026ம் ஆண்டு வரை குத்தகை காலம் உள்ளது. இந்நிலையில் ராமகிருஷ்ணன் இறந்து விட்ட நிலையில் அவரது மகன் கோபாலிடமும் பேசி குத்தகை குறித்து சங்கையா பேசி முடித்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் இவர் பயிரிட்டிருந்த வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து ங்கையா கூறுகையில், ‘கோபாலுக்கும் அவரது 2 சகோதரிகளுக்கும் சொத்து தொடர்பாக தாகராறு ஏற்பட்ட வந்தது. இந்நிலையில் நேற்று கழுகேர்கடையில் ரூ.பல லட்சம் செலவில் பயிரிடப்பட்டுள்ள 3 ஏக்கர் வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி நாசம் செய்து விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்’ என்றார். இதன்பேரில் போலீசார் வாழை மரங்களை வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
