ராமநாதபுரம்: பரமக்குடியில் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.அண்டக்குடியில் உள்ள இடத்தை வரன்முறை செய்ய அனுமதி தர ரூ.50,000 லஞ்சம் கேட்டதாக புகார். விண்ணப்பம் தந்தவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கும்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் சிக்கினார்.
