போதை பொருள் சப்ளை விவகாரம்: சினிமா தயாரிப்பாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

அண்ணாநகர்: சென்னையில் போதை பொருள் சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 21ம் தேதி நடிகர் சிம்புவின் முன்னாள் மேனேஜர் சர்புதீன் (44) மற்றும் பட்டதாரி சரத் (30), தியானேஸ்வரன் (25), சீனிவாசன் (27) ஆகிய 4 பேரை போதைப்பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிம்புவின் மேனேஜர் சர்புதீன், சரத் ஆகிய இருவரை கடந்த 7ம்தேதி ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்தனர்.

அப்போது சர்புதீன் அளித்த தகவலின்படி, நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் (32) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தினேஷ் ராஜை ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை செய்வதற்கு எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்படி, புழல் சிறையில் இருந்து தினேஷ்ராஜை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிந்து இன்று மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கின்றனர்.

Related Stories: