புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் பணிகளுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று அரசியல் கட்சிகள் தனி நபர்கள் என பலரும் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து, வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பாக விவகாரத்தில் தாக்கல் செய்யும் அரசியல் கட்சியினர் விளம்பரம் தேடி இத்தகைய மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்களோ என கவலை ஏற்படுவதாகவும், இந்த விஷயத்தை தீவிர அரசியல் விவகாரமாக மாற்ற முயற்சிப்பதாகவும் கூறினார்.
மேலும் தொடர்ந்து இத்தகைய மனுக்கள் தாக்கல் தாக்கல் செய்யப்படும் நிலையில் மாநில வாரியாக தான் இந்த விவகாரத்தை தாங்கள் விசாரிக்க இருப்பதாக கூறினார். மேலும் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பான பீகார் மாநிலம் தொடர்புடைய வழக்குகளை முதலில் விசாரித்து முடிக்கப் போவதாகவும் அதன் அடிப்படையிலேயே மற்ற மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகள் மீதும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்களது மாநிலம் நில நில பரப்பிலும் சரி மக்கள் தொகையிலும் சரி மிகப்பெரியது. எனவே தேர்தல் ஆணையம் நிர்ணயத்திருக்கக்கூடிய காலக்கெடு என்பது போதாது எனவே கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என வாதங்களை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் எஸ் ஐ ஆர் விவகாரம் தொடர்பான மனு மனுக்கள் தாக்கல் செய்த வழக்கறிஞர், பேசும் பொழுது தமிழகத்தில் கிறிஸ்மஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்திற்கு பணி நிமித்தமாக ஏராளமானோர் சென்றிருக்கிறார்கள் எனவே இதில் நடைமுறை சிக்கல் நிறைய இருக்கிறது அதனால் இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்..
இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அசாம் மாநிலத்திலும் மற்ற மாநிலங்களைப் போலவே எஸ் ஐ ஆர் நடைமுறைகளை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய மனு மீதும் மேற்கு வங்க மாநிலத்தில் எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதலான மத்திய படைகளை அனுப்ப உத்தரவிடக்கோரிய மனுக்கள் மீதும் பதில் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
மேலும் கேரள மாநிலத்தில் இந்த நடைமுறைகளை மேலும் நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும் எஸ் ஐ ஆர் பணிகளில் ஈடுபடும் பி.எல். ஓ-க்களின் பாதுகாப்பை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
