இந்தியாவில் சி-130ஜே விமானம் உற்பத்தி

 

புதுடெல்லி: இந்திய விமானப்படையானது 80 லிப்ட் போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் ஏரோநாட்டிக்ஸின் துணைத் தலைவர் ராபர்ட் டோத் கூறுகையில், ‘‘சி-130ஜே விமானங்களில் நடுத்தர போக்குவரத்து திட்டத்துக்கு முன்னதாகவே தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். மேலும் இந்தியாவில் விமானங்களை உருவாக்குவதற்கும் எங்களை முன்னிறுத்திக்கொள்கிறோம்.

உண்மையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து வாய்ப்புக்களும் இருந்தாலும், இந்தியாவில கூட்டு உற்பத்தி வசதியை அமைப்போம் என்று நாங்கள் உறுதியளித்த முதல் நாடு இந்தியாதான். இந்திய விமானப்படையானது 12 சி-130ஜே விமானங்களை இயக்குகின்றது. லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமானது டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது” என்றார்.

Related Stories: