110 நாடுகள் பங்கேற்கிறது சென்னையில் ஜன.16ம் தேதி பன்னாட்டு புத்தகத் திருவிழா

சென்னை: பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் ஜனவரி 16ம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார். பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இந்த விழாவில் பங்கேற்று புத்தகத்திருவிழாவின் இலச்சினையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. 100 நாடுகள் பங்கேற்கும் இந்த புத்தக திருவிழா, நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுதல் என்ற மிகப் பெரிய இலக்குகளை எட்டும் முயற்சியாக அமையும்.தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள், நேரடியாக கலந்துரையாடி புத்தக காப்புரிமை பரிமாற்றங்கள், கலாச்சார இலக்கிய பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை இந்த புத்தகத் திருவிழா உருவாக்கும்.

2003ல் இந்த புத்தக திருவிழா தொடங்கப்பட்ட போது 24 நாடுகள் பங்கேற்றன. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து தற்போது 64 நாடுகள் 81 மொழிகளுடன் விரிவடைந்து பொதுமக்களும் பங்கேற்கும் தளமாக அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 110 தமிழ் எழுத்தாளர்களின் 185 நூல்கள், 26 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பதிப்பாளர்களுக்காக பிரான்ஸ் அரசின் சிறப்பு அமர்வுகள், துருக்கிய அரசின் மானியம் பற்றிய கருத்தரங்கு மற்றும் விவாதங்கள், போலோனியா குழந்தைகள் புத்தக கண்காட்சியின் ஓவியம் , வடிவமைப்பு, ஈரான் அரசின் புத்தகப்படங்கள் பற்றிய வழிமுறை வகுப்புகள் ஆகியவை இடம் பெற உள்ளன. இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.

Related Stories: