சென்னை: சென்னை எழும்பூரில் ஏப்.5ல் தொடங்கப்பட இருந்த புறநகர் ரயில் சேவை ஏப்.3ம் தேதி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் நடைமேடை 10, 11ல் பணிகள் நடந்து வரும் நிலையில் பிப்.20 முதல் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அனைத்து பணிகளும் திட்டமிட்ட நேரத்துக்கு முன்னரே முடிக்கப்பட்டதால் ஏப்.3 முதல் புறநகர் ரயில் சேவை தொடங்குகிறது.
