10ம் வகுப்பு தேர்வில் 12 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது. 4 பாட தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நேற்று நடந்தது. தேர்வில் பங்கேற்க 8 லட்சத்து 96 ஆயிரத்து 550 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர், தனித் தேர்வர்கள் 13 ஆயிரத்து 744 பேர். பள்ளி மாணவர்கள் 11 ஆயிரத்து 228 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 1213 பேர் நேற்றைய தேர்வுக்கு வரவில்லை. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நாமக்கல் 2, பெரம்பலூர் 1, கடலூர் 1 என மொத்தம் 4 பேர் பறக்கும் படையிடம் சிக்கியுள்ளனர்.

Related Stories: