டெல்லி : உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் விளக்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
