சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் வரும் 5ம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேம்பால பணிகள் காரணமாக 10 மற்றும் 11வது நடைமேடைகள் மூடப்பட்டு, தற்காலிக அட்டவணை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டன. மேம்பாலத்தில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெறும் எனவும், சாய்வு பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த 15 நாட்களில் நிறைவு பெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
