டெல்லி: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். திமுக, காங். கம்யூ. மற்றும் பிற மாநில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர். எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகரிடம் வழங்கினர்.
