மின் ஊழியருக்கு கத்திக்குத்து 2 வாலிபர்களுக்கு வலை பைக்கில் மோதுவதை தட்டிக்கேட்ட

வேலூர், பிப்.26: வேலூரில் பைக்கில் மோதுவதை போல் வந்ததை தட்டிக்கேட்ட மின் ஊழியரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(30). சேண்பாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அந்தப்பகுதியில் உள்ள இரும்புக்கடை அருகே சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த கோபி(25), மணி(22) ஆகியோர் மதுபோதையில் முருகனின் பைக் மீது மோதுவதுபோல் வந்துள்ளனர். இதை முருகன் தட்டிகேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கோபி, மணி ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் முருகனை சரமாரி குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முருகன் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி, மணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: