திமுக மக்கள் கிராமசபை கூட்டம்

ஓமலூர், ஜன.13: ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமாரன் தலைமை வகித்தார். காமராஜ் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜ அய்யப்பன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கருணாகரன், மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, விவசாய அணி துணை அமைப்பாளர் சம்பு சண்முகம், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் ஜெயக்குமார்,மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, ஒன்றிய கவுன்சிலர் கோபால்சாமி, மாவட்ட பிரதிநிதி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் குழந்தைவேல், விஷ்வா, விக்னேஸ்வரன், ஸ்ரீதர், ரமேஷ், மகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>