கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வாழப்பாடி, ஜன.13: ஆணைமடுவு அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வாழப்பாடி அருகே, புளுதிக்குட்டை ஊராட்சி ஆணைமடுவு அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், ஆணைமடுவு அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். அதன்படி, ஆணைமடுவு அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்காடு எம்எல்ஏ சித்ரா, வாழப்பாடி ஒன்றியக்குழு தலைவர் சதீஷ்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவிதா, ராணி, விஜயராகவன், பாட்ஷா மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

 

முதல் நாளில் ஆற்று பாசனத்திற்கு தலைமை மதகின் மூலம் தினந்தோறும் 60 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு, நாள் ஒன்றுக்கு 5.18 மில்லியன் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 நாட்களுக்கு 82.87 மில்லியன் கன அடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட் உள்ளது. வரும் 27ம் தேதியில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 35 கனஅடி வீதம் நாள் ஒன்றுக்கு 3.2 மில்லியன் கன அடி வலது புற கால்வாய் பாசனத்திற்கும், தினந்தோறும் 15 கனஅடி வீதம் நாள் ஒன்றுக்கு 1.30 மில்லியன்கள் அடி என மொத்தம் கால்வாய் பாசனத்திற்கு தினந்தோறும் 50 கனஅடி வீதம் நாள் ஒன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடியும், 15 நாட்களுக்கு 64.80 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க உள்ளது.

Related Stories:

>