டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதிய உணவை புறக்கணித்து சிஐடியூ உறுதிமொழி ஏற்பு

தஞ்சை, ஜன.12: டெல்லியில் கடும் குளிரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் சிஐடியூ சார்பில் மதிய உணவை புறக்கணித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை பாலாஜி நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபால், மாநில குழு உறுப்பினர் பேர்நீதி ஆழ்வார், தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், துணை தலைவர் குருசாமி, பொருளாளர் ராஜா, மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு, சிஐடியூ மாவட்ட துணை செயலாளர்கள் செங்குட்டுவன், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>