மர்மவிலங்கு கடித்து இறந்து கிடந்த நாய்; ஆலஞ்சோலையில் சிறுத்தை நடமாட்டமா?: பொதுமக்கள் அச்சம்

அருமனை: அருமனை அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் பெல்லர் (45). தோட்டம் அமைத்து அதில் வாழை சாகுபடி செய்து பராமரித்து வருகிறார். தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் பகல் நேரங்களில் சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். மேலும் தோட்டத்தில் இரவு காவலுக்கு 3 நாய்கள் விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிறிய செடியில் கட்டியிருந்த ஒரு நாயை காணவில்லை.

இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஒரு நாயை கட்டி போட்டிருந்தனர். மற்ற நாய்களை கட்டாமல் விட்டு இருந்தனர். நேற்று தோட்டத்தில் கட்டி போட்டிருந்த நாயை மர்மவிலங்கு கொன்று உடலின் பெரும் பகுதியை குதறி தின்ற நிலையில் காணப்பட்டது. மற்ற நாயும் ஒருவித பயத்துடன் நின்றிருந்தன. இதனால் நாயை கொன்றது சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் மர்மவிலங்கா? என தெரியவில்லை. எனினும் அப்பகுதி மக்கள் நாயை கொன்று தின்றது சிறுத்தை தான் கூறி அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற களியல் வனத்துறையினர் நாயை இறந்து கிடந்த இடத்ைத பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் எந்த விலங்கின் கால் தடம் உள்ளதா? என ஆய்வு நடத்தினர். தோட்டத்தில் காவலுக்கு நிறுத்திய நாயை மர்மவிலங்கு கொன்ற சம்பவம் அப்பகுதி மக்கள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: