தஞ்சாவூர்: மேகதாது அணை தொடர்பான அறிக்கையை நீர்வள ஆணையத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டோம் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது தொடர்பான அறிக்கை நிலுவையில் இல்லை எனவும் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை இன்னும் எங்களிடம் வழங்கப்படவில்லை எனவும் ஹல்தர் தெரிவித்துள்ளார்.
