புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோடை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.ஒரு கோடி செலவில் “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
