வேலாயுதம்பாளையம், டிச. 5: கரூரில் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவன் ஆர்.சஞ்சித் அக்னி ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். கரூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மாநிலத் தேர்வுப் போட்டியில் 8-10 வயது பிரிவில் ரேங்க் ஒன்று ராங் மூன்று பிரிவுகளில் தங்கபதக்கம் பெற்றார். அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்கேட்டிங் கிரவுண்டில் நடைபெற்ற மாநிலப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000+ மாணவர்கள், குறிப்பாக 8-10 வயது பிரிவில் 90 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மீண்டும் சஞ்சித் ரேங்க் ஒன் ராங் இரண்டு ரேங்க் மூன்று பிரிகளில் தங்கப் பதக்கம் பெற்றார். மீண்டும் மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்று டைமிங்கிலல் சாதனை படைத்து, வரும் டிசம்பர் மாதம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தேசிய மட்டப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பள்ளி மாணவன் கரூர் மத்திய மேற்கு பகுதிகளாக பொறுப்பாளர் ஜோதிபாஸ் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
