அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்

 

ஊட்டி, டிச. 5: ஊட்டியில் அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 8ம் தேதி நடக்கிறது. வாடிக்கையாளர்களின் குறைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.12.2025 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் எனப்படும் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 8ம் தேதியன்று 10 மணியளவில் நடைபெற உள்ளது. அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி ேகாட்டம், ஊட்டி 643001 என்ற முகவரிக்கு உறை மேல் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் சம்பந்தமாக என்று குறிப்பிட்டு இன்றைக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: