காரிமங்கலம், டிச. 5: காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோயிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. ெதாடர்ந்து, நேற்று மாலை, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் உதயசங்கர், உதயசங்கர், விஸ்வநாதன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
ராமர் கோயிலில் விஷ்ணு தீபம்
- விஷ்ணு தீபம்
- ராம் கோயில்
- Karimangalam
- காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோவில்
- கார்த்திகை தீபம்
- பரணி தீபம்
- மகா தீபம்
